நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படம்!!! அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!!

0
95
#image_title

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படம்!!! அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!!

நடிகை நயன்தாரா அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு நேற்று(அக்டோபர்24) வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.

நடிகை நயன்தாரா அவர்கள் அடுத்து அவருடைய 75வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கவுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படத்திற்கு அன்னபூரணி என்று டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அன்னபூரணி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அன்னபூரணி திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எஸ் தமன் அவர்கள் இசையமைத்துள்ளார். நாட்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து அன்னபூரணி திரைப்படத்தை தயாரித்துள்ளது.

விரைவில் திரையரங்குகளில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அன்னபூரணி திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நேற்று(அக்டோபர்24) வெளியான நிலையில் இணையத்தில் மிகவும் வைரலாகி பரவி வருகின்றது.