நடிகை பூனம் பாண்டே இறக்கவில்லை.. அவரே சொன்ன தகவல்!

0
543
#image_title

நடிகை பூனம் பாண்டே இறக்கவில்லை.. அவரே சொன்ன தகவல்!

மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே அவர்கள் கருப்பை வாய் புற்று நோயால் இறந்து விட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. நேற்று வெளியான இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி பதிவை போட்டு வந்தனர்.

சர்ச்சைக்கு பேர் போன பூனம் பாண்டே உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். நிஷா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை தன் வசமாக்கினார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பூனம் பாண்டே தனது 32ஆவது வயதில் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியான நிலையில் இன்று அவர் உயிருடன் நலமாக பேசும் வீடியோ வெளியாகி பகீரை கிளப்பி இருக்கின்றது.

அந்த வீடியோவில் தான் நலமாக இருப்பதாகவும்.. தனக்கு கருப்பை வாய் புற்றுநோய் இல்லை என்று கூறி இருக்கிறார்.

மேலும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் அவ்வாறு செய்ததாக அவர் தெரிவிக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

பூனம் பாண்டே இறக்கவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்… அவரின் இந்த செயல் நெட்டிசன்களை கொந்தளிக்க செய்துள்ளது.

Previous articleஅரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleகேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி?