Breaking News

நடிகை பூர்ணா குழந்தைக்கு துபாய் பட்டத்து இளவரசரின் பெயர்!!

நடிகை பூர்ணா குழந்தைக்கு துபாய் பட்டத்து இளவரசரின் பெயர்!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகையான பூர்ணா என்ற ஷம்னா காசிம் தமிழ் திரையுலகில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, தலைவி உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவரை ஜேபிஎஸ் குழும நிறுவனர் மற்றும் சிஇஓ ஷானித் ஆசிப் அலியை அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு துபாயில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் ஷம்னா பகிர்ந்துள்ளார். தற்போது அந்த குழந்தைக்கு தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர்.

குழந்தையின் பெயர் ஹம்தான் என சூட்டியுள்ளனர் . துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் என்பவரது பெயரை பூர்ணா தனது மகனுக்கு சூட்டியுள்ளார்.

துபாயில் உள்ள ஆஸ்டர் மருத்துவமனையில் ஷம்னாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர் பாத்திமா சஃபா மற்றும் அவரது குழுவினருக்கும் பூர்ணா நன்றி தெரிவித்துள்ளார். குழந்தையுடனான புகைப்படங்களை தனது சமெக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.