நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

0
252

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி ,அஜித் ,விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் எண்ணற்ற படங்களை  நடித்துள்ளார்.இந்நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் ரம்பா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவார்.

https://www.instagram.com/p/CkZdR20sxtk/

இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றார்.அவர்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவர்களை அழைத்து கொண்டு வரும்பொழுது கார் விபத்துக்குள்ளானது.அந்த விபத்தில் அவரும் அவருடைய குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

ஆனால் அவருடைய குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் .அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் ரம்பா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleசென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை போக்குவரத்து நெரிசல்! ஆனால் மக்களிடையே காணப்படும் மகிழ்ச்சி ஏன் தெரியுமா?
Next articleஅந்த கோமாளிய பத்தி என்கிட்ட கேக்காதீங்க! மீண்டும் மீண்டும் அண்ணாமலையை சீண்டும் செந்தில் பாலாஜி!