மதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!

Photo of author

By Vijay

மதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!

Vijay

நடிகை ரெஜினா விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான அழகிய அசுரா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா.

அதை தொடர்ந்து, இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மாநகரம், சந்திரமவுலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார்.

சமீபத்தில் இவர் நடித்த கசடதபற மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த முகிழ் ஆகிய திரைப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும், தற்போது நடிகை ரெஜினா நடித்துள்ள பார்டர், கள்ளபார்ட், ஏழு, பார்ட்டி, சூர்ப்பனகை ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது படத்தின் அப்டேட் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சமீப சில நாட்களாக விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CVPwOmiIVaR/?utm_source=ig_web_copy_link