நடிகை ரோஜா திடீரென்று மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
164
Actress Roja suddenly admitted to hospital! Shocked fans!
Actress Roja suddenly admitted to hospital! Shocked fans!

நடிகை ரோஜா திடீரென்று மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை ரோஜா தமிழில் முதன் முதலில் செம்பருத்தி என்னும் படத்தில் அறிமுகமானார்.1990 மற்றும் 2000 களில் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வளம் வந்தார்.அதன்பின் தெலுங்கு,கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.இவரின் முக்கிய தமிழ் படங்களான சூரியன்,உழைப்பாளி,ராஜ,என் ஆசை ரோஜாவே,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,சின்ன ராஜ,ஹவுஸ்புல் போன்ற படங்களை நடித்துள்ளார்.இந்த படங்களின் கதாபாத்திரங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

அதன்பின் இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.அதனையடுத்து ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ வாகவும் உள்ளார்.இவருக்கு பல நாட்களாக கர்ப்பப்பை  பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதன்பின் அவர் பரிசோதனை செய்ததில் கருப்பப்பையில் கட்டி உள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தற்போது கர்ப்பப்பை அறுவைசிகிச்சை நடந்து கட்டி அகற்றப்பட்டுள்ளது.இதைப்பற்றி அவரது கணவர் கூறியது,ரோஜாவுக்கு இரண்டு அறுவைசிகிச்சை நடந்துள்ளது.சென்ற வருடமே இந்த அறுவைசிகிச்சையானது நடக்க வேண்டி இருந்தது.தாமதம் செயத்தாதல் பாதிப்பு தீவீரம் ஆகிவிட்டது.

இப்போது பெரிய அளவில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது.அனைவரின் பிரார்த்தனையாலும்,கடவுள் அருளாலும் நல்லபடியாக அறுவைசிகிச்சை தற்போது முடிந்துள்ளது என்றார்.இது கொரோனா காலக்கட்டம் அதுமட்டுமின்றி இந்த அறுவைசிகிச்சை பெரிய அளவில் நடந்துள்ளதால் இன்னும் இரு வாரத்திற்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறினார்.தயவு செய்து யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.இருவாரங்கள் கழித்து அவரை வந்து சந்திக்குமாறு தெரிவித்தார்.