நடிகை சமந்தா தனது திருமண நாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்துவந்த தான் காரணமாக நடிகை சமந்தா நாக சைதன்யா தம்பதியினர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக சமூகவலைதளங்களில் வதந்தியாக வெளிவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியயை ஏற்படுத்தியது .
நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்து அறிவித்த பிறகு சமூக வலைதளங்களில் எந்தவித புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்த நிலையில், இன்று நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா அவர்களின் 4 வது திருமண நாள் ஆகும். இந்நிலையில் இன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கடந்த வருட திருமண நாளில் நடிகை சமந்தா, ” நான் உன்னுடையவள், நீ என்னுடைய நபர். எந்த கதவு வந்தாலும் நாம் அதை ஒன்றாக திறப்போம். இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கணவர்” என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CUtYnBYBhbA/?utm_source=ig_web_copy_link