உடல் எடையை குறைத்து மீண்டும் வந்த சினேகா..வைரலாகும் புகைப்படம்.!!

Photo of author

By Vijay

உடல் எடையை குறைத்து மீண்டும் வந்த சினேகா..வைரலாகும் புகைப்படம்.!!

Vijay

புதிய படவாய்ப்புகள் வந்ததால் நடிகை சினேகா ஜிம்முக்கு போய் கடினமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா.அதனைத் தொடர்ந்து அப்பாஸ்க்கு ஜோடியாக ஆனந்தம் படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து, புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பாராத்திபன் கனவு, வசீகரா, ஆட்டோ கிராஃப் உள்ளிட்ட சுமார் 70 திரைப்படங்களில் நடித்து விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சினேகா முதன்முறையாக நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், காதலர்களாக மாரிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது பிரசன்னா-சினேகா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது சினேகா வெயிட் போட்டதால் திரைப்படங்களில் எதிலும் தலைகாட்டாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை சினேகாவுக்கு மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் வருவதால், உடல் பருமனை குறைக்க ஜிம்முக்கு சென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து வருகிறார்.

இதுவரை 7 கிலோ உடல் எடையை குறைந்த போதிலும், மேலும் எடையை குறைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகை சினேகா நடத்திய போட்டோ ஷூட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.