பாஜக தாமரை கிடையாது கருவேல மரம்… அடியோடு அழிக்க வேண்டும் – நடிகை விந்தியா விமர்சனம்….!!!

0
177
#image_title

கோவை மக்களவை தொகுதி சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர் பாஜக மற்றும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதன்படி நடிகை விந்தியா பேசியதாவது, “கோவை தொகுதியில் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று நடிகர் வடிவேலு பாணியில் ஆட்டுக்குட்டி ஒன்று சத்தம் போட்டு கொண்டிருக்கிறது. எப்படி திருவிழா முடிந்ததும் ஆட்டை வளர்த்தவனே அதை பலி கொடுப்பானோ அதேபோல தேர்தல் முடிந்ததும் அந்த ஆட்டுக்குட்டி கோவையில் மட்டன் பிரியாணியாவது உறுதி.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது. அது ஆபத்தான கருவேல மரம். எனவே அது வளர வளர நாம் வெட்டி கொண்டே இருக்க வேண்டும். பாஜக எந்த அளவிற்கு ஆபத்தானதோ அதைவிட அண்ணாமலை மிகவும் ஆபத்தானவர். அதனால் அவர்களை நாம் தமிழகத்தில் வளரவிடக்கூடாது” என பேசியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி மற்றவரையும் விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதில் என்னவோ அண்ணாமலையை தான் பலரும் தாக்கி பேசி வருகிறார்கள். விந்தியா என்னவென்றால் அவரை ஆட்டுக்குட்டி என்று பேசியுள்ளார்.

ஆனால் மற்றொரு புறம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேசிய பாடலாசிரியர் சினேகன் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைத்து ஆடுகளுக்கு உண்டான மரியாதையை கெடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். இப்படி ஆளாளுக்கு அண்ணாமலையை மட்டுமே டார்கெட் செய்து விமர்சித்து வருகிறார்கள்.