வெறும் 3:43 நிமிடத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை..!! இதில் தான் அதிக வருமானம் வருகிறதாம்..!!

0
426
Actress who earned Rs.5 Crores in just 3:43 minutes..!! This is where more income comes in..!!
Actress who earned Rs.5 Crores in just 3:43 minutes..!! This is where more income comes in..!!

வெறும் 3:43 நிமிடத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை..!! இதில் தான் அதிக வருமானம் வருகிறதாம்..!!

கடந்த கால தியுரையுலகில் நடிகர்ளை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டது.நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத் தொகை நடிகைகள் கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்தால் தான் பெற முடிகிறது என்பது நடிகைகளின் ஆதங்கமாக இருந்து வந்தது.

ஆனால் இன்றைய திரைத்துறையில் அந்த நிலை முற்றிலும் மாறி தற்பொழுது ஹீரோக்களளுக்கு இணையான சம்பளம் வாங்கும் அளவிற்கு நடிகைகள் தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.தங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

கதை தேர்வில் கவனமாக இருக்கும் நடிகைகள் சம்பள விவகாரத்திலும் கறாராக உள்ளனர்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக கலக்கும் நயன்தாரா,த்ரிஷா போன்றவர்கள் ஒரு படத்திற்காக அதிகபட்சமாக ரூ.12 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில் அவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு படத்தில் வெறும் 3:43 காட்சிக்காக நடிகை ஒருவர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி அசத்தி இருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’.இந்த படம் வெளியாகி ரூ.360 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது.இப்படம் ஹிட்டானதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் இடம் பெற்றிருத்த “ஓ சொல்றியா மாமா” என்ற ஐட்டம் பாடல் தான்.சமந்தாவின் அழகிய நடனம் மற்றும் முக பாவனையால் ரசிகர்களை கிறங்கடித்து இருப்பார்.

வெறும் 3:43 நிமிடங்கள் மட்டும் வரும் இந்த பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் தான் அப்பொழுது பேசு பொருளாக மாறியது.அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவை விட பல மடங்கு சம்பளம் வாங்கி இருப்பார் சமந்தா.

படம் கதாநாயகி ராஷ்மிகாவின் சம்பளம் ரூ.4 கோடி.ஆனால் அந்த படத்தில் 3:43 நிமிடங்கள் இடம் பெற்றிருந்த ஐட்டம் பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் ரூ.5 கோடி ஆகும்.

சமந்தாவை போல் மற்றொரு நடிகை 3 நிமிட ஐட்டம் பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்கந்தா என்ற படத்தில் வரும் ஐட்டம் பாடலுக்காக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி அவர்கள் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என்று மொத்தம் 3 நிமிட பாடலுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.

ஒரு படத்தில் ஹீரோயின்களை விட ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம் என்பது ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பின் மூலம் தெரிய வருகிறது.

Previous article20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் படம்..!! முதல் நாள் வசூல் தெரிந்தால் ஆடி போயிடுவீங்க..!!
Next articleமாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!!