‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!!
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு படும் தோல்வி அடைந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பல திட்டங்கல் தீட்டி வருகிறது. அதன் படி திமுக ஆதிமுக பாஜக போன்ற கட்சியினர் மாநாடு மற்றும் கட்சி உறுப்பினர் சேர்ப்பு என பம்பரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் திருச்சியில் மாநாடு ஒன்றை ஒ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தி முடித்தனர். மேலும் தனது பெரும் கட்சி பலத்தை காட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சினர் மாநாடு நடத்த ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில் மத்திய காட்சிகளுக்கு மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து மிக பெரிய பலத்தை வெளிப்படுத்தி கொண்டிருகிறது.
மத்தியக் கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக ஆதிமுக கட்சியும், காங்கிரசுக்கு ஆதரவாக திமுகவும் இணைந்து பல திட்டங்களை வகுத்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடாமல் திமுக வுடம் இணைந்து போட்டியிடும் என ஏதிர்பார்க்க படுகிறது ஏன அரசியல் வட்டாரம் சந்தேகிகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமலஹாசன் உடனான சந்திப்பு ஆதரவை வலுபடுத்திய நிலையில், திமுக பிரபலங்களை புகழ்ந்து பல பதிவுகளை போடுவதால் ‘மக்கள் நீதி மய்யம்’ திமுகவுடன் இணையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கட்சி வேட்பாளர்கள் சேர்க்கயும் நடைபெற்று வருகிறது.
தமிழ் திரைப்பட குணசித்திர நடிகை வினோதினி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கமலஹாசன் விவாசயிகளளை சந்தித்த போது அவருடன் ஹேச்.வினோத் இருந்தது அரசியல் வட்டாரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.