மது பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை!! மனம் உருகி அறிவுரை!!
தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பலரின் மனத்திலும் இடம் பிடித்த ஒரு நடிகை தான் மனிஷா கொய்ராலா ஆவார். இவர் தமிழில் பம்பாய், இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா போன்ற ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதன் மூலமாக இவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வந்தார். பிறகு இவர் நேபாள தொழிலதிபர் சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமண உறவு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து இவர் புற்றுநோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டு சரியானார்.
இவர் ஒரு காலக்கட்டத்தில் மதுவிற்கு மிகவும் அடிமையாகி இருந்தார். எனவே, அந்த மது அருந்தியதை குறித்து தற்போது மனிஷா கொய்ராலா கூறியதாவது,
நான் என் கணவருடன் இருந்து விவாகரத்து பெற்றதும் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். அந்த சமயத்தில் நான் மது பழக்கத்திற்கு மிகவும் அடிமையானேன்.
இந்த பழக்கத்தால் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. மேலும், இந்த தவாறன பழக்கத்தால் மதிப்பு மிக்க என் வாழ்க்கையே பறிபோய் விட்டது. எனவே, மது அருந்தினால் அனைத்து பிரச்சனைகளும் சறியாகி விடும் என்று நினைப்பது முற்றிலும் தவறு.
மது நமக்கு மேலும் பல பிரச்சனைகளைத்தான் ஏற்படுத்தும். எனவே, இதை புரிந்து கொண்டு அனைவரும் வாழ வேண்டும் என்று அறிவுரையை வழங்கி உள்ளார்.