எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்…

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்…

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார்.

எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். இதன் பின்பு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நடிக்க நடித்த அவர் தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எம்ஜிஆர் கூட நடிக்க மறுத்த நடிகைகளைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, எம்ஜிஆர் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். எம்ஜிஆர் நடித்த முதல் படம் சாயா. இப்படத்தல் டிவி குமுதினி என்பவர் கதாநாயகியாக நடித்தார். ஒரு படப்பிடிப்பு சீனில் டிவி குமுதினி மடியில் எம்ஜிஆர் தலைவைத்து படுத்து வசனம் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டது.

ஆனால், டிவி குமுதினிக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கவில்லை. எனவே, அந்த காதல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அதேபோல், எம்.ஜி.ஆர் சொந்த செலவில் உருவான படம் தான் நாடோடி மன்னன். இப்படத்தில் முதலில் நடிகை பானுமதிதான் நடித்தார். படம் பாதி முடிந்த நிலையில், அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று பானுமதி கூறிவிட்டு சென்று விட்டார். எம்.ஜி.ஆர் பலரை வைத்து பேசியும் அவர் இணங்கி வரவில்லை. அதன் பிறகு நடிகை சரோஜா தேவியை அப்படத்தில் அறிமுகம் செய்து நடிக்க வைத்தார். ஆனால், படம் சூப்பர் ஹிட்டடித்தது.

எம்ஜிஆர் படத்தில் நடித்து பிரபலமான சரோஜா தேவி, ‘வேட்டைக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்குமாறு கேட்டனர். ஆனால், அதற்கு அவர் நான் பிஸியாக இருக்கிறேன். என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதன் பிற்கு, அப்படத்தில் சாவித்ரியை நடிக்க வைத்தாராம் எம்.ஜி.ஆர்.

இதேபோல், பத்மினியும், ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். எம்.ஜி.ஆருடன் நடித்து பிரபலமான நடிகை ஜெயலலிதாவும், எம்ஜிஆர் மேல் இருந்த தனிப்பட்ட கோபத்தில் சிவாஜி, ஜெய் சங்கர், முத்துராமன் ஆகியோரோடு இணைந்து நடிக்க துவங்கினாராம்.