அதர்வா-சற்குணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!!

Photo of author

By Jayachithra

அதர்வா-சற்குணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!!

Jayachithra

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதனைத்தொடர்ந்து இவர் வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் நடிகர் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார்

மேலும் இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.