நாம் அனைவரும் நம் உடல் எடையை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.சிலர் உடல் எடையை குறைக்க இயற்கை முறையை பின்பற்றுகின்றனர்.உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகம் சேர்ந்துவிட்டால் மாரடைப்பு,சர்க்கரை,இரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் வீட்டு வைத்தியம் இதோ:
1)பூண்டு
2)தண்ணீர்
ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
இந்த பூண்டு நீரை வடிகட்டி தினமும் இருநேரம் பருகி வந்தால் உடலில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்.
1)சீரகம்
2)தண்ணீர்
10 கிராம் சீரகத்தை வறுத்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
1)சியா சீட்ஸ்
2)தேன்
கிளாஸ் ஒன்றில் ஒரு தேக்கரண்டி சியா சீட்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
1)எலுமிச்சை சாறு
2)தேன்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 15 மில்லி எலுமிச்சை சாறு மற்றும் 10 மில்லி தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை தானாக கட்டுக்குள் வரும்.
1)பார்லி அரிசி
2)தண்ணீர்
பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவிடவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பார்லி நீரை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
1)ஆளிவிதை
2)தண்ணீர்
சிறிய கிண்ணத்தில் அரை தேக்கரண்டி ஆளிவிதை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.பிறகு இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.