புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

0
173

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரங்களில் டிபன் அயிட்டமாக இட்லி தோசை போன்றவைகள் தான் என்கின்றார்கள் அந்த வகையில்இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட துவையலாக இந்த எள்ளு புதினா சட்னி வைத்து சாப்பிடலாம். ரொம்பவும் சுவையான இந்த எள்ளு புதினா சட்னி ஆரோக்கியமானதும் கூட. சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி எள்ளு புதினா சட்னி அல்லது துவையல் செய்யும் முறை.

எள்ளு புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்: முதலில் வெள்ளை எள்ளு நாலு டீஸ்பூன், பிறகு கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், பிறகு உளுத்தம் பருப்பு இரண்டு டீஸ்பூன் பிறகு பூண்டு பல் நான்கு, பிறகு பச்சை மிளகாய் 4, காய்ந்த மிளகாய் 4, அடுத்து தக்காளி இரண்டு, பிறகு புதினா ஒரு கைப்பிடி அளவு, அடுத்தது உப்பு தேவையான அளவு. மேலும் தாளிக்க தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், பிறகு உளுந்து 1/4 ஸ்பூன், பிறகு வர மிளகாய் 1, பிறகு கருவேப்பிலை ஒரு கொத்து,

 

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெள்ளை எள்ளு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை மேலே கூறியுள்ள அளவில் சேர்த்து கொன்டு பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்து எடுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அப்படியே ஆற விட்டு விடுங்கள். பின்னர் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள், பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசம் போக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த இந்த பொருட்களை நன்கு அப்படியே ஆற விட்டுவிட வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துள்ள பொருட்களை ஒரு முறை லேசாக அறைக்கலமல் பாதி அளவு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆறிய இந்த மிளகாய் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளி மற்றும் புதினா இலைகள் இரண்டு நிமிடத்தில் வதங்கி விடும். அதன் பிறகு இந்த பொருட்களையும் ஆற வைத்து எல்லா பொருட்களையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, ஒரு வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து அரைத்து எடுத்து வைத்த சட்னியையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான இந்த எள்ளு புதினா சட்னியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.

 

Previous articleபணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!
Next articleஇந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…