இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட சாப்பிடும் தயிரில் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்!!

இக்காலத்தில் சர்க்கரை நோய் அதிகரித்து வரும் ஒரு பெரும் ஆபத்தாக மாறிவருகிறது.மோசமான வாழ்க்கைமுறை முற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் இந்த பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகிறது.

பாரம்பரியத் தன்மை,அதிகமான இனிப்பு உணவுகள் உட்கொள்ளல்,வயது முதுமை,உடல் பருமன் போன்ற காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அதை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது.

இலவங்கப்பட்டையில் அடங்கியிருக்கும் சத்துக்கள்:

பொட்டாசியம்,கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் பி1,பி6,ஆன்டி-ஆக்ஸிடண்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

50 கிராம் இலவங்கப்பட்டையை லேசாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் சுத்தமான கெட்டி தயிர் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அரைத்த இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிடவும்.

இலவங்கப்பட்டை மற்றும் தயிர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.இலவங்கப்பட்டை பொடியை தயிரில் கலந்து சாப்பிடலாம்.சூடான நீரில் கலந்தும் சாப்பிடலாம்.இலவங்கப்பட்டையில் டீ செய்து சாப்பிட விருப்பினால் சுவைக்காக தேன்,சர்க்கரை,வெல்லம் போன்ற எந்த ஒரு இனிப்பு பொருளையும் சேர்க்க கூடாது.சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க மருந்து சாப்பிடுவர்கள் இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்திட முடியும்.