இந்த எண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேருங்க! ஒரே வாரத்தில் கொழுப்பு கட்டிக்கு நிரந்தர தீர்வு!
பலரின் உடலிலும் கொழுப்பு கட்டிகள் இருக்கும். அதனை நாம் வீட்டில் இருந்தே இந்த மருத்துவ குறிப்பை பின்பற்றுவதன் மூலம் அதனை நீக்க முடியும்.
கொழுப்பு கட்டியை லிபாமா என்றும் மருத்துவத்தில் கூறுவர். உடலில் உள் பகுதிகளில் இது வளர்ச்சி அடையும். நாளடைவில் கொப்பளம் போல் காட்சியளிக்கும்.
இவ்வாறு இருப்பது கொழுப்பு கட்டி என கூறுவர். கொழுப்பு கட்டிக்கும் புற்றுநோய் கட்டிற்கும் வேறுபாடு உள்ளது.
தேவையான பொருள்
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
விளக்கெண்ணெய் 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு காட்டன் துணியில் கல் உப்பு போட்டு ஒத்தடம் கொடுக்கும் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உப்பு எடுத்த காட்டன் துணியை நன்றாக கட்டிவிட்டு அந்த எண்ணெயில் மூழ்கும்படி செய்ய வேண்டும்.
இதனிடையே அடுப்பில் வெறும் தோசைக்கல்லை வைத்து சூடு படுத்த வேண்டும். அதனுடன் எண்ணெயில் மூழ்கிய அந்த காட்டன் துணியை தோசை கல்லில் வைத்து கை பொறுக்கும் அளவிற்கு சூடு செய்ய வேண்டும்.
மேலும் அதனை கொழுப்பு கட்டிகள் உள்ள இடத்தில் ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டும். கொழுப்பு கட்டியை கரைக்கும் தன்மை கல் உப்பிற்கு உள்ளது. அதனால் இது கொழுப்பு கட்டி கரைக்க உதவும்.