தற்பொழுது ஆண்களைவிட பெண்கள் தான் சிறுநீர் கடுப்பு,சிறுநீர்ப்பாதை தொற்று பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தவும்.
தேவையான பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம் – ஐந்து
2)தண்ணீர் – 250 மில்லி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
**முதலில் ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீர் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
**பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
**ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் தண்ணீர் சூடானதும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத் துண்டுகளை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
**அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வேண்டும்.
**250 மில்லி தண்ணீர் சுண்டி 150 மில்லியாக வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சிறுநீர் கடுப்பு மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)உளுந்து பருப்பு – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
தயாரிக்கும் முறை:-
**முதலில் இரண்டு தேக்கரண்டி உளுந்து பருப்பை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.பிறகு உளுந்து நீரை வடித்து பருக வேண்டும்.இப்படி செய்து வந்தால் சிறுநீர் கடுப்பு சீக்கிரம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)கருப்பட்டி / நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
**முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சை அளவு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.
**அதன் பிறகு புளியை கரைத்து வேறொரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் நீர்க்கடுப்பு,சிறுநீரகத் தொற்று முற்றிலும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)கற்கண்டு – சிறிதளவு
தயாரிக்கும் முறை:-
**ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
**அடுத்து இந்த சீரகத் தண்ணீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.
**இந்த சீரக பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீர் கடுப்பு,சிறுநீரகத் தொற்று முற்றிலும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)நீர்முள்ளி இலை
2)சாதம் வடித்த கஞ்சி
தயாரிக்கும் முறை:-
**முதலில் சிறிதளவு நீர்முள்ளி இலையை தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு சாதம் வடித்த கஞ்சியை ஆறவைத்து இந்த நீர்முள்ளி இலை விழுதை போட்டு கலக்க வேண்டும்.
**இந்த கஞ்சியை குடிப்பதால் சிறுநீர் கடுப்பு,சிறுநீர்பாதை தொற்று முற்றிலும் குணமாகும்.