அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 

Photo of author

By Amutha

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 

Amutha

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 

என்ஐடி-யயை சேர்ந்த மாணவர் ஒருவர் அமேசானில் 1.8 கோடி சம்பளம் பெற்று அசத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள என் ஐ டி மாணவரான  அபிஷேக் அமேசான் நிறுவனத்தில் 1.8 கோடி ஆண்டு சம்பளமாக பெற வாய்ப்பு பெற்றுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக பயின்று வருகிறார்.

அவரது தீவிர கடின உழைப்பின் பயனாக அமேசான் நிறுவனத்தில் ஆண்டிற்கு 1.8 கோடி ஊதியத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்.

நமது இந்திய மாணவர்கள் உலக அளவில் உள்ள தகவல் தொழில்நுட்ப சம்பந்தமான துறைகளில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இதனையொட்டி இந்த ஆண்டு பீகாரின் என்ஐடி மாணவரான அபிஷேக் அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்.

இதனை கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை அபிஷேக்கிற்கு அமேசான் தெரிவித்தது. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி அபிஷேக் அதற்கான கோடிங் தேர்வில் ஈடுபட்டு வெற்றி பெற்று உள்ளார். அதன்பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி 3 சுற்றுகள் கொண்ட ஒரு மணிநேர நேர்காணலிலும் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்று உள்ளார்.

ஜெர்மனி மற்றும் அயர்லாந்து நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் அபிஷேக்கிடம் நேர்காணலை நிகழ்த்தியுள்ளனர். அபிஷேக் அதில் பிளாக் செயின் பற்றி கூறி நன்மதிப்பை பெற்றதால் அவருக்கு இந்த வேலை கிடைக்கப்பெற்றுள்ளது.

அபிஷேக்கிற்கு முன்னால் என்.ஐ.டி-இல் பயின்ற மாணவி அதிதி திவாரிக்கு 1.6 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்தது. அரசு பள்ளி ஆசிரியையின் மகளான அதிதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதேபோல் அதிதிக்கு முன்னால்    என். ஐ.டி -யில் பயின்ற சம்பிரீத்தி யாதவ் என்ற மாணவிக்கு ஆண்டுக்கு 1.11 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.