ட்ரோல்களுக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… ஆனா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

0
227

ட்ரோல்களுக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… ஆனா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ். இதனால் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அளவுக்கு அதிகமான பட்ஜெட் போடப்பட்டன. ஆனால் அந்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. மேலும் பிரபாஸின் நடிப்பும் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் பிரபாஸ் தற்போது நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸோடு கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் வெளியானது.

மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமூகவலைதளங்களில் கேலிக்கு ஆளானது. மேலும் கார்ட்டூன் படம் போல இருப்பதாக ரசிகர்கள் மீம்களையும் ட்ரோல்களையும் பரப்பினர்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குனர் ஓம் ராவத்துக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லி காரை பரிசாக அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டீசர் வெளியான பின்னர் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத் மேல் பிரபாஸ் கடுமையான அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் பிரபாஸ் இயக்குனரிடம் கோபமாக “என் ரூமுக்கு வாங்க” எனக் கூறிவிட்டு செல்லும் வீடியோவை ரசிகர்கள் இதைப் பரப்பி வருகின்றனர்.

Previous articleஇயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!
Next articleகவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here