சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை!

Photo of author

By CineDesk

சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை!

கிரிக்கெட்டுக்கு ஒரு ஐபிஎல், கால்பந்துக்கு ஒரு ஐ.எஸ்.எல் போல் டென்னிஸ் விளையாட்டுக்கு டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது

இதில் ‘சென்னை ஸ்டாலியன்ஸ்’ என்ற அணியை பிரபல நடிகை ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். மணிரத்தினம் இயக்கிய ’காற்று வெளியிடை’, ’செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சென்னை டென்னிஸ் அணியை வாங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

தனக்கு டென்னிஸ் வீராங்கனையாக வேண்டும் என்று சிறு வயதில் கனவு இருந்ததாகவும், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடிகையாகிவிட்டதாகவும், இதனையடுத்து தற்போது டென்னிஸ் வீரர்களுக்கு உதவும் வகையில் சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கியிருப்பதாகவும் பேட்டி ஒன்றில் அதிதி ராவ் ஹைத்ரி தெரிவித்துள்ளார்.

நடிகை அதிதி ராவ் ஹைத்ரி தற்போது தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’சைக்கோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.