ஆப்கானிஸ்தானை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி

0
123

ஆப்கானிஸ்தானை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி

லக்னோவில் நடந்துவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 27 ஆம் தேதி தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 187 ரன்களில் சுருண்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ராகீம் கார்ன்வால்75 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 277 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது தனது முதலாவது சதத்தை நிறைவு செய்த புரூக்ஸ் 111 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். ஜான் கேம்பல் 55 ரன்களும் டோ ரீச் 42 ரன்களும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகள் மளமளவென தாரை வார்த்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 109ரன்கள் சேர்த்தது இதில் அகமதி 62 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 11 ரன்கள் எடுத்து ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ராகீம் கார்ன்வால் மேலும் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் ரஹீம் கார்ன்வால் அணியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதன்மூலம் ஒரு டெஸ்ட் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை பந்தாடியது.

author avatar
CineDesk