சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தடை! தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடவடிக்கை!

Photo of author

By Parthipan K

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தடை! தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடவடிக்கை!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு  கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார் என்று கேள்வி இடம் பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு உரிய அங்கீகாரம் இல்லாதா தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது.அதில் முன் கல்வித்தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை சேர்த்துள்ளனர்.

மேலும் படிப்பு முடிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது என பல்வேறு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக இருந்த ராமன் என்பவர் சஸ்பெண்ட் செய்யபட்டார்.

இதுபோல  குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் எம்.எட் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.

இதற்கு காரணமாக பல்கலைக்கழகத்தில் போதிய வசதி இல்லாததால் மற்றும் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.