சென்னை: இந்த அறிக்கையில், “பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பட்டப்படிப்பில் பயில்கின்ற போதே பாதியில் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும், முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல இளநிலை, முதுகலை படிப்புகளை ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் 50 சதவீதம் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்பயிற்சி அளிக்கும் வகையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 4 ஆண்டு இளநிலை படிப்பில் இளங்கலை அறிவியலின், கெளரவ இயற்பியல் படிப்பு, கெளரவ உயிரியல் படிப்பு, கெளரவ கணிதவியல் படிப்பு ஆகியவற்றுக்கான பட்டம் பெற்றால், முதுகலைப் பொறியியல் படிப்பை 2 ஆண்டுகள் படிக்கலாம்.
மாணவர்கள் பட்டப்படிப்பினை படிக்கும் போது வெளியில் சென்று விட்டு, பின்னர் மீண்டும் சேர்ந்து படிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து படித்தாலும், இடையில் நின்று மீண்டும் படித்தாலும் அவர்களுக்கு அரசு, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு செல்லும் போது சான்றிதழ்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது பொது மக்கள் தங்களின் கருத்துகளை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.