வக்கீல் படிப்பிற்க்கான சேர்க்கை அறிவிப்பு!!இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்!! 

Photo of author

By Parthipan K

வக்கீல் படிப்பிற்க்கான சேர்க்கை அறிவிப்பு!!இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்!!

வக்கீல் ஆவதற்கான சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு சேர்வதற்கான விண்ணப்பம் இன்று(ஜூலை 17) முதல் ஆக 10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் வக்கீல் ஆவதற்கான விண்ணப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில்தான் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, சட்டப் பல்கலைகழகத்தில் மூன்று ஆண்டுக்கான எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு சேர இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் சென்று தங்களுடைய விண்ணப்ப படிவினை பூர்த்தி செய்யுமாறு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.