மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி என்ன ஆனது எதிர்க்கட்சித் தலைவருக்கு?

Photo of author

By Sakthi

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சரும் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் இருக்கக்கூடிய எம்ஜிஎம் மருத்துவமனையில் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஒருநாள் முழுமையான ஓய்வில் இருந்து விட்டு பின்னர் வீடு திரும்பினார்.

அப்போது தேர்தல் காலம் என்பதால் அவரால் பெரிய அளவில் ஓய்வு எடுக்க முடியவில்லை. தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருந்தது காரணமாக, பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு இடையில் அவருக்கு திடீரென்று குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் இதற்காக மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முதல்வருக்கு என்னவாயிற்று என்று பதறித் தான் போனார்கள்.

ஆனால் அவர் உடல் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு ஒருநாள் ஓய்விற்குப் பின்னர் உடனடியாக வீடு திரும்பியவுடன் நான் அவர்களின் பதற்றம் தணிந்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடலிறக்க பிரச்சனை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், இது குறித்து பரிசோதனை செய்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே பரிசோதனை முடிவடைந்த பின்னர் இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.