கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அதிமுக ஐவர் குழு கூட்டணி…..!!4 மணி நேர ஆலோசனை..?ஆலோசனையின் முக்கியத்துவம் என்ன??

Photo of author

By CineDesk

அதிமுகவில் ஐவர் குழு எனப்படும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கொண்ட குழு, நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளது. மாலை தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்தது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள மாநகர், புறநகர் என்ற நிர்வாக அமைப்பு முறையை மாற்றி குறிப்பிட்ட தொகுதிகளுக்கு ஒரு செயலாளரை நியமித்தால் அவர்களுக்கு பணிச்சுமை குறையும் என்றும் இவ்வாறு நியமிக்கப்படின் திட்டங்களை சரிவர செய்து முடிக்கப்படும் என்றும் பேசப்பட்டிருக்கிறது.

மேலும் அவர்கள் பேசுகையில் தற்போதைய நடைமுறைப்படி மாவட்டச் செயலாளர்கள் மாற்றமோ, நியமனமோ நடைபெற்றால் பதவி கிடைக்காதவர்கள் சட்டமன்றத் தேர்தலின் போது ஒதுங்கிக்கொள்வார்கள் என்பதை கருத்தில்கொண்டு, மாவட்டவாரியாக முன்னணி நிர்வாகிகள் பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அந்தவகையில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று நியமனம் செய்யலாம் என்று அவர்களுக்குள் ஆலோசனை செய்து இருக்கின்றனர்.

மேலும் ஐவர் குழுவில் இருவர் கேபி முனுசாமி மற்றும் விஸ்வநாதன் ஆகியோர்கள் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை பொறுத்தவரை இப்போது உள்ள நடைமுறை தொடர்ந்தாலும் சரி, இல்லை புதிய நிர்வாக அமைப்பு ஏற்படுத்தினாலும் சரி, ஆனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகிய இருவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர்.மேலும் அவர்கள் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.