ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டு தீ

0
67

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென காட்டு தீ பரவியது.மேற்கு தொடர்ச்சி மலை சரகமானது ராஜபாளையம் சேத்தூர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சரகம் உள்ளது.இந்த சரகமானது அய்யனார் கோவில், வாழைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நாவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோயில் என 9 பீட்டுகளாக உள்ளது.

திங்கட்கிழமை மாலை பிறாவடியார் பீட் பகுதியில் திடீரென தீ பற்றியது.இந்த தீயானது மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் மலைப்பகுதி முழுவதும் பரவியது.அப்பகுதியை சுற்றிலும் 100 ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவி வருகிறது. இந்த தீ விபத்தால் மலையில் உள்ள அறிய வகை மூலிகைகள்,செடிக்கொடிகள் மரங்கள் தீயில் கருகின.

இரவு நேரத்தில் காற்று அதிகமாக வீசுவதால் இந்த தீ அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது மேலும் இந்த தீயால் மலைப்பகுதியில் உள்ள வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது முதற்கட்டமாக பிறாவாடியார் மற்றும் நாவலத்து பீட் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் என 12 பேர் கொண்ட குழு அப்பகுதிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K