ADMK DMK: திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் கூட்டணி சாடி தான் உள்ளது. ஆனால் ஒருபோதும் அதிமுக அப்படி கிடையாது. தனித்து ஆட்சி அமைத்த வரலாறெல்லாம் உள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியானது அமையும் என்று தலைவர் உறுதியளித்துள்ளார்.
திமுக, பெயருக்கு தான் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை அளிப்பது போல் காட்டுகிறது. ஆனால் அதிமுக இவ்வாறு கூட்டணி என்ற அடையாளத்தையே முடித்துக் கட்டும் அளவிற்கு எந்த ஒரு செயலையும் செய்யாது. மேலும் ஒவ்வொரு கட்சியும் அதன் நோக்கத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் கட்டாயம் அதிமுகவுடன் இணைய வேண்டும். அந்த வகையில் கட்சியில் கட்டுண்டு கிடப்போம், வேற்றுமை பெறும் சமதளத்தில் இணைவோம் என்ற கொள்கை அதிமுகவினுடையது.
அதற்கேற்றார் போல் கூட்டணி கட்சிகளுக்கு தனிப்பட்ட மரியாதை என்பது கிடைக்கும், அது என்றும் மாறாது. இதுவே திமுகவில் பார்த்தால் விசிக-வை மது ஒழிப்பு போராட்டம் நடத்த விடவில்லை, அதனை மாற்றி மது ஒழிப்பு மகளிர் மாநாடாகத்தான் நடைபெற்றது. மேற்கொண்டு சிபிஎம் மாநில செயலாளர் திமுக அரசை எதிர்த்து பேசிய போது மறுநாளே அவர் தலைமையிலிருந்து மாற்றப்பட்டார். இதுபோல் திமுக தன் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் அழுத்தம் ஏராளம்.
தேர்தல் வரும் போது மட்டும் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கிடையே திமுக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபடும். அதன் பின் அதனை அப்படியே விட்டு விடுகின்றனர். ஆனால் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போதையிலிருந்து திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை செய்து கொண்டு தான் வருகிறார். கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து விவரிப்பார்.
மேற்கொண்டு இவரிடம் தனியார் ஊடகமானது சிவி சண்முகம் முதல்வர் பற்றி “உங்களில் நான் நிகழ்ச்சியில்” அப்பா என்று கூறியதை விமர்சித்தது பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மாஜி அமைச்சர் சிவி சண்முகம் மரியாதை நிமித்தமாக தான் பேசியுள்ளார் என தெரிவித்தார். இது அடுத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.