கலைக்கப்படுகிறதா அமமுக? திமுகவிற்கு தாவும் தொண்டர்கள்!

0
146

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடவேண்டும் என்ற ஒரு விடா முயற்சியுடன் சசிகலா செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் பல்வேறு உத்திகளையும் கையாண்டு இருக்கிறார்.அத்துடன் ஆரம்பத்தில் அதிமுகவை எதிர்த்து தன்னுடைய எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்த சசிகலா அதிமுகவை தற்சமயம் கைப்பற்ற இயலாது என்ற நிலைக்கு வந்தவுடன் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.அதோடு அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க திடீரென்று தன்னுடைய அரசியல் ஓய்வு முடிவை அவர் அறிவித்தார்.

ஆனால் மறுபுறமோ அதிமுகவின் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவை பீதி அடைய செய்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக, அதிமுகவும் வெலவெலத்துப் போனது என்று தான் சொல்ல வேண்டும்.எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று சசிகலா முயற்சி செய்துகொண்டு இருக்க அதிமுக தலைமை இனி அதிமுகவில் சசிகலா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதற்கிடையில் வாணியம்பாடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சட்டசபைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும், அதோடு சமையல் எரிவாயு மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்று பல பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுவதாக தெரிவித்தது. ஆனாலும் இந்த வாக்குறுதிகளை திமுக அரசு இதுவரையில் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் எந்த சமயத்தில் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதியே விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தை திமுக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு உடைக்க இருக்கிறது. ஆனால் எங்களுடைய ஆட்சி காலத்தில் நாங்கள் எந்த விதமான பாகுபாடும் பார்க்க வில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதன்பின்னர் சசிகலா தொடர்பான கேள்வி எழுந்தது அதற்கு பதில் தெரிவித்த கே சி வீரமணி சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் உரையாற்றுவோர் அனைவருமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தான். சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாற்றுவது அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் இதில் ஏதோ ஒரு சதித்திட்டம் நடைபெறுவதை நாம் பார்க்க முடிகிறது அந்த சதித் திட்டத்தை அறிந்து கொண்ட சசிகலா தொலைகாட்சியில் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். சசிகலாவும், தினகரனும், திமுகவின் கைப்பாவையாக செயல்.பட்டு வருகிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் அதிமுகவிடம் நம்முடைய வேலை எதுவும் செல்லுபடியாகாது என்ற நிலை வந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு அதில் இருப்பவர்கள் அனைவரும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleதமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த அண்ணாமலை!
Next articleவன்னியர் உள் ஒதுக்கீட்டில் சட்ட சிக்கல்? தடுக்க இதை செய்தாக வேண்டும்-சீமான் வலியுறுத்தல்