திமுகவை பூஜ்யமாக்க 10 தொகுதிகளை வைத்து அதிமுக போட்ட பக்கா பிளான்!

0
114

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நமது தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதில் 171 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. அதோடு அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய சிறு சிறு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கூட்டங்களில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், மீதம்இருக்கின்ற 10 தொகுதிகளில் இதுவரையில் எந்த ஒரு கட்சிக்கும் இடம் அளிக்கப்படாமல் இருக்கிறது ஆகவே இந்த 10 தொகுதிகளை எதற்காக அதிமுக வைத்திருக்கிறது என்பது எல்லோரையும் குழப்பமடைய செய்திருக்கிறது.

அந்த 10 தொகுதிகளில் பெயர்கள் வருமாறு பட்டுக்கோட்டை, திருச்சுழி, பெரம்பலூர், தூத்துக்குடி, பத்மநாபபுரம், மதுரை மத்திய தொகுதி, தஞ்சாவூர், திருவிக நகர், ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளை மீதம் வைத்திருக்கிறது அதிமுக கூட்டணி. ஆகவே இந்த 10 தொகுதிகளில் ஏதோ ஒரு மிகப்பெரிய திட்டத்தை அதிமுக கூட்டணி வைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பத்து தொகுதிகளை வைத்து திமுகவை வெற்றி  பெற்று விடலாமா என்பதே இப்போது அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருந்து வருகிறது.அப்படியானால், இந்த 10 தொகுதிகளில் அதிமுக என்ன திட்டத்தை வைத்திருக்கிறது என்பதே தற்சமயம் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் ஆராய தொடங்கியிருக்கிறார்கள்.

Previous articleகடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த புதிய கட்சி!
Next articleஏமாற்றத்தால் விரக்தி அடைந்த நடிகை கௌதமி ட்விட்!