அதிமுக கோமா ஸ்டேஜ்! அதிமுக ஆட்சி கவிழ்க்க சதியா?

0
168

நேற்று தேனியில் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் பேசியதாவது, அதிமுக ஆட்சிைய கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள், கனவு காணவில்லை, அது விரைவில் நனவாக நடக்கத்தான் போகிறது என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

தேனி அருகே வீரபாண்டியில் அமமுக கட்சியினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தாய் கழகமான திமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கானோரை வருக, என வரவேற்கிறேன்.

இன்னும் தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற அங்குள்ள உண்மையான விசுவாசிகளை தாய் கழகமான திமுகவுக்கு அழைக்கிறேன் என்றார். தங்க தமிழ்ச்செல்வன் ஒன்றும் அறியாதவர். பலமுறை அவருக்கு, நாங்கள் தூது அனுப்பினோம். இன்றைக்கு வந்து மீண்டும் தாய் கழகத்தில் இணைத்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் படத்தை சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறார்கள். அது உள்ளன்புடன் இல்லை. லஞ்சம் வாங்கி, கொள்ளை அடிக்கவும், பதவி சுகத்திற்காகவும்தான்.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் தான் முதலமைச்சரானார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஓ பி எஸ் யிடம் இருந்து பதவியை பறித்ததும் தர்மயுத்தம் என்றார். ஜெயலலிதா ஆவியுடன் பேசினேன் என்றார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று முதன்முதலில் புரளியை கிளப்பியதே ஓபிஎஸ் தான். ஆனால், அதுபற்றி விசாரிக்க ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டு, 6 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. ஏன் ஆஜராக வில்லை என்ன காரணம். ஏனால் கூறியது தர்ம யுத்தம் அனைத்தும் மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நாடகம்.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி விட்டது என்று கூறுகிறார்கள். நான் கேள்வி கேக்குறேன் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் அல்வா கொடுத்து ஏமாற்றியது அனைவரும் அறிவர்? ஓட்டு போட்ட தமிழக மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். அதிமுக ஆட்சி கவிழ்ந்து அடுத்து விரைவில் தேர்தல் வரும். திமுக அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியில் இடம் பிடிக்கும். இப்போதுள்ள அதிமுக ஆட்சி ‘கோமா’ நிலையில் உள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றி, தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.முயல் பிடிக்கிறவன் முகத்தை பார்த்தால் தெரியும் என்பார்கள். அப்படித்தான், திமுகவை பார்த்து, தேர்தலில் வெற்றியை தந்தார்கள். நாங்கள் சொன்னதை செய்வோம் என்று மக்கள் நம்புகிறார்கள். அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அந்த தேர்தலிலும் நாங்கள் வாக்குறுதிகள் கொடுப்போம். இதையும், மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டுவோம்.

இதற்கு முன் அதிமுக எம்பிக்கள் 37 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். தமிழக நலனுக்காக மத்திய அரசை கண்டித்து, அவர்கள் பேசியது உண்டா? குரல் எழுப்பியது உண்டா? தீர்மானம் கொண்டு வந்தது உண்டா? எதுவும் கிடையாது.தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் 37 பேர் வெற்றி பெற்று, என்ன செய்ய முடியும்? மத்தியில் பிஜேபி ஆட்சி. தமிழகத்தில் அதிமுக ஆட்சி. நாடாளுமன்றத்தில் திமுக 3வது பெரிய கட்சியாக இருந்தாலும், என்ன சாதிக்க போகிறார்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்கள். திமுக எம்பிக்கள் கடந்த ஒரு மாதத்தில் என்ன சாதித்தார்கள் என்பதை பட்டியல் போட்டு சொல்ல முடியும். பள்ளிக்கூடத்தில் இந்தி கட்டாயமாக்கியதை திரும்ப பெற வைத்தது திமுக. ரயில்வே துறையில் இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை ஒரு மணிநேரத்தில் திரும்ப பெற வைத்தது திமுக எம்பிக்கள்.

தபால்துறையில் இந்தியில் தேர்வு நடந்ததை ரத்து செய்ய வைத்து, தமிழிலும் தேர்வு எழுதலாம் என உத்தரவாதம் அளிக்க வைத்தது திமுக. ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து திமுக எதிர்த்து வருகிறது. நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தான் அமைக்கிறது. அவருக்கு தைரியம், தெம்பு, திராணி, துணிச்சல் இருந்தால் அதை எதிர்த்து வாதிட தயாரா?காவிரி நீர் பிரச்னை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக நலன் காக்க தொடர்ந்து திமுக குரல் கொடுக்கிறது. மக்களவை தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்றது.

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இது, ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று சொன்னோம். இந்த ஆட்சியை கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள். கனவு காணவில்லை. அது, விரைவில் நனவாகி நடக்கத்தான் போகிறது. அதற்கு அனைவரும் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது,ரூ.550 கோடி செலவு செய்து, அதிமுக ஒரு எம்பி பதவியை பெற்றுள்ளது. அமைச்சர் ஒருவர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கு வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என்றார்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் பேசினார். விரைவில் ஆட்சி மாற்றம் வருமா? அதிமுக கோமா நிலையில் தான் இருக்கிறதா தர்ம யுத்தம் அனைத்தும் பொய்யா? என்பதை அடுத்த தேர்தலில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleநடிகர் சூர்யாவிற்கு இவரே ஆதரவு தெரிவித்து விட்டாரா?
Next articleசாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்