முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! இன்று மாலை ஒப்பந்தம்!

Photo of author

By Sakthi

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த விதத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று ஆலோசனை செய்து இருக்கிறார்கள்.

அதிமுகவின் கூட்டணியில் இப்போது வரையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளில் பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு தேமுதிக மற்றும் தாமாகா போன்ற பல கட்சிகளுடன் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை அதிமுக மற்றும் இந்திய குடியரசு கட்சிக்கு இடையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.