திமுகவுக்கு வந்த அடுத்த சிக்கல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் தேர்தல்களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது.இந்தநிலையில், எதிர்கட்சியான திமுக என்னதான் தமிழகம் முழுவதிலும் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டாலும் தமிழக மக்களிடையே அதிமுகவிற்கு இருக்கும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முடியாத நிலையில், அந்தக் கட்சி விரக்தியில் இருந்து வருகிறது.ஆகவேதான் பெண்கள் தொடர்பாகவும் மற்றும் மறைந்த அரசியல் தலைவர்கள் தொடர்பாகவும் அடுத்தடுத்து அருவருக்கத்தக்க சில கருத்துக்களை அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும், சம்பந்தப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பது தொடர்பாக அதிமுகவின் வழக்கறிஞர் அணியின் இணை செயலாளர் பாபு முருகவேல் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களை சந்தித்து திமுக எம்பி தயாநிதி மாறன் மீது புகார் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாபு முருகவேல் சமீபத்தில் தயாநிதிமாறன் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடியபோது மோடி அவர்களையும், ஜெயலலிதா அவர்களையும் சம்பந்தப்படுத்தி மிகக் கீழ்த்தரமான முறையில் உரையாற்றி இருப்பதாகவும், அது கண்டிக்கத்தக்கது என்றும் அதேநேரம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து இருப்பதாக கூறினார்.

அதோடு திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தைச் சார்ந்தவர்களே பாஜகவின் பி.டீமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர் தயாநிதிமாறன் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருக்கிறோம் அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.