ராசாவிற்கு ஆப்படித்த தேர்தல் ஆணையம்! விரக்தியில் ஸ்டாலின்!

0
86

தமிழகம் முழுவதிலும் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது அரசியல் கட்சிகள் எல்லாமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் என்ற வரிசையில் இருக்கும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் மிக கீழ்த்தரமான முறையில் அருவருக்கத்தக்க ஒரு சில கருத்துக்களை தெரிவித்து கொச்சைப் படுத்தினார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அதோடு ஆங்காங்கே போராட்டங்களும் வெடிக்க தொடங்கின.

அதோடு தேர்தல் ஆங்கிலத்திலும் ராஜா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட அடுத்த இரண்டு நாட்களுக்கு தடைவிதித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.அதோடு இனி வரும் காலங்களில் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஆபாசமாகவோ அல்லது தர குறைவாகவோ பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் பெண்கள் தொடர்பாக அவதூறான கருத்துக்களை தெரிவித்த ராசாவிற்கு இந்த தண்டனை மட்டும் போதாது அவர் கடைசி வரையில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு வேறு ஏதாவது ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்து தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.