மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்!!

Photo of author

By Savitha

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து துறைகளும் டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி இல்லாமல் மாற்று வருவாயை அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், விலை ஏற்றத்தினால் வருவாய் உயர்ந்திருப்பதாக அமைச்சர் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், revenue growth மட்டுமே உயர்ந்துள்ளது, physical growth உயரவில்லை எனவும், மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும் எனவும் தெரிவித்தார்.