சொன்ன சொல் மாறாத எடப்பாடி! சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு விரைவில் சட்டம்!!
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சில நாட்களுக்கு முன்பு அதிமுக அறிவித்திருந்தது. இதனை சட்டமாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா அதை சட்டமாக இயற்ற முடியுமா என்று திமுக கேலி செய்தது.
இந்நிலையில், சிறப்பு வேளாண் மண்டலம் சட்டமசோதா குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை கூடும் அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியை பற்றி கலந்து ஆலோசித்த விஷயத்தை உறுதி செய்யும் வகையில் சட்டமாக அறிவிக்கப்பட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு விவசாய சங்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நன்றியை தெரிவத்தனர். தமிழக முதல்வர் ஒரு விவசாயி அதனால் விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல்வேறு அரசியல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடம் இருந்து அதிமுக பாராட்டை பெற்றது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் மண்டல அறிவிப்பு குறித்து உறுதியான முடிவு எடுக்கப்பட்டு, வருகின்ற 20 ஆம் தேதி இதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.