நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர்
தற்போதைய தமிழக அரசியலில் எதிர்கட்சிகளை சமாளிப்பதில் திறமையாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரோட அமைச்சரவையில் உள்ள ராஜேந்திர பாலாஜியுடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால்வளத்துறைக்கு கீழ் வரும் ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்ய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுவதாக அது பற்றிய விவகாரத்தில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அதிகமாகும் இந்த உபரிப் பாலை பால் பவுடராக மாற்றி விடலாம் என்று அதிகாரிகள் சிலர் கூறியிருக்கின்றனர், ஆனால் பால் பவுடருக்கு மார்க்கெட் குறைவு என்று இன்னொரு தரப்பு அதிகாரிகள் சொல்லியிருப்பதாக கூறுகின்றனர். அதனால், முடிவாக இவ்வாறு கிடைக்கும் உபரிப் பாலை வெளியே விற்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு வரும் இந்த உபரிப் பாலை நான் சொல்லும் நபர்களுக்கு டெண்டர் விடுங்கள் என்று பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தனக்கு ஆதரவான நபர்களுக்கு டெண்டர் விட சொல்லி வலியுறுத்திய விவகாரம் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.
அமைச்சருக்கு ஆதாரவு எம்.டி.யான காமராஜ் மாற்றப்பட்டு, இப்போது வந்திருக்கும் புதிய எம்.டி.யான வள்ளலாரோ, அமைச்சரின் முடிவை ஏற்க மறுத்ததோடு, அதை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போயிருப்பதாக கூறுகின்றனர்.
இதைக்கேட்டு கோபமடைந்த எடப்பாடியோ, திருட்டுப் பூனைகள் பாலைக் குடிச்சிடாமல் இ-டெண்டர் விட்டு விடுங்கள் என்று கறாராகச் சொல்லிவிட்டதாக கூறுகின்றனர். இதையறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக ருத்திர தாண்டவம் ஆடியதோடு, நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்னு நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் அதிமுகவில் ஒரு தர்ம யுத்தம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.