அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!!
பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குனர் பேரரசு. அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பாராட்டும் விதமாக தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு மிகவும் துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை செய்தியில் வெளிப்படையாக கூறுபவர். தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமைச்சரின் பேட்டியை சுட்டிக்காட்டி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் பேரரசு செயல் தலைவர் ஸடாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்துள்ளார்.
மேலும் டுவிட்டரில், இந்துவாய் இருந்து கொண்டு இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதங்களை ஆதரிப்பது சரியாம். ஆனால், ஒரு இந்து இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்’ இது நல்ல மதச்சார்பின்மை என்று தனது டுவிட்டரில் இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்து உடனே திமுகவை ஆதாரத்துடன் பலர் தாக்கி வருவது வாடிக்கையாகி உள்ளது.