சேலம் மாவட்டத்தில் அரசின் உத்தரவையும் மீறி வீட்டு உபயோகப் பொருள் வாங்க வேண்டும் என்று கடையைத் திறக்கச் சொல்லி பொருட்கள் வாங்க மனைவியுடன் வந்த அதிமுக எம்எல்ஏ செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், சேலம் ,ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகம் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி அரசு வழங்கவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப் பட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏ செய்த இந்தச் செயல் பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் அவரது மனைவி இருவரும் இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஷார்ப்டிரானிக்ஸ் என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு வந்து உள்ளனர். மூடியிருந்த கடையை திறக்க சொல்லி பாலசுப்பிரமணியன் வற்புறுத்தி வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கடையைத் திறந்து இருப்பதை கண்டு கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது எம்எல்ஏ பாலசுப்ரமணியம் கட்டாயப்படுத்தி கடையைத் திறக்கச் சொல்லி பொருட்கள் வாங்கிக் கொண்டு இருப்பதை ஊழியர்கள் போலீசாரிடம் சொல்லியுள்ளனர்.
அப்பொழுது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் அவரது மனைவி இருவரும் வெளியே வந்து காவல் துறையினரும் மிகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின் அவர்கள் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அரசின் உத்தரவையும் மீறி அதிமுக எம்எல்ஏ வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடையை திறக்க சொல்லி வற்புறுத்தி செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ப்தி யை ஏற்படுத்தியுள்ளது.
பதவியில் இருப்பவர்கle இப்படி செய்யும் பொழுது இது ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.