சட்டசபை உறுப்பினர் கூட்டத்தில் ஒ.பி.எஸ் செய்த செயல்! அதிருப்தியில் இ.பி.எஸ்!

Photo of author

By Sakthi

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்கான அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது .அந்த கூட்டத்தில், ஏற்ப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து கூச்சல் குழப்பம் காரணமாக, அன்றைய முடிவும் எடுக்கப்படவில்லை.ஆகவே இன்றைய தினம் நடைபெறும் என ஒத்தி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று காலை நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

ஆனால் தொடர்ச்சியாக பூ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் விடாப்பிடியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. அதேநேரம் ஓபிஎஸ் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரை செய்தார். ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்ததால் இறுதியாக இருவரும் சமாதானம் அடைந்து எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.