அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு 

Photo of author

By Anand

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையால் கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடந்த நாளன்று O பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த கோப்புகளை எடுத்து சென்ற வீடியோ வெளியாகியிருந்தது.

அந்த சமயத்தில் அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது.இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து சென்றனர்.இதனைத்தொடர்ந்து எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

வீடியோ ஆதாரங்கள்

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படும் என இரு தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இந்நிலையில் அதிமுக அலுவலக சீலை நீக்கவும்,மேலும் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.