டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி அ.தி.மு.க வினர் போராட்டம்!

0
133
ADMK Protest in Delta
ADMK Protest in Delta

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின்  பேரில் முன்னாள் அமைச்சர் மணியன் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றார்.சுமார் 3,50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குருவை நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் அ.தி.மு.கவினர் இப்போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர்.

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதாது என அ.தி.மு.கவினர் இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க முன்னால் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் பங்கேற்றனர்.

காவிரி டெல்டா விவசாயிகள் நலவுரிமை சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் குருவை நெல் சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடக அரசிடம் பெற்று தருமாறும், தமிழகத்தின் உரிமையான காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர்.

இதற்கு முன்பு தமிழக அரசு பாசன நீர் பற்றாகுறையினால் கருகிய  நெற்பயிர்களுக்கு 2.5 ஏக்கருக்கு ரூ.13,500  வழங்கியது.இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் 1,74,000  ஏக்கர் குருவை நெற்பயிர் நடவு செய்திருந்ததில் சுமார் 60,000 ஏக்கர்  பயிர்கள் கருகியுள்ளது. இந்நிலையில் 650 ஏக்கர் பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பாக  வேளாண்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் விவசாயிகள் கூறினர்.

இப்போராட்டத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் 4 வட்டாச்சியர் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவ்வாறு காவிரி நதி நீரின்றி நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் இந்தாண்டு பருவ மழையும் பொய்த்துள்ளது. இதனால் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறினர்.எனவே கர்நாடக அரசிடம் காவிரி நதிநீர் பெற அழுத்தம் கொடுக்குமாறும் தமிழக அரசிடம் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.

மேட்டூர் அணையிலும் நீர்கொள்ளளவு சுமார் 32  கன அடியாக குறைந்துள்ளது.இதனால் நெற்பயிர் சாகுபடிக்கு திறந்து விடும் நீரின் அளவானது 3000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.கடந்த ஏழாண்டுகளில் தற்போதுதான் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 கன அடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்
Next articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 2 தேதி எஸ்ஏஇஎஸ் திறனறி தேர்வு!!