தமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

0
165
Orissa Balu
Orissa Balu

திருச்சி உறையூரில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம் என்பதாகும்.இவர் உறையூரில் பிறந்திருந்தாலும்  விழுப்புரம்,நெய்வேலி,அம்பத்தூர்,சென்னை பகுதிகளில் இவரது பள்ளி கல்லூரி படிப்புகள் பெரும்பாலும் அமைந்திருந்தது.தொழில் நிமித்தமாக ஒரிசா சென்ற இவர் அங்கு தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பின்பு  செயலாளராகவும் பணியாற்றினார்.இந்நிலையில் தான் ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உலகத்திற்கு எடுத்துரைத்தார்.

தமிழக மக்கள் இவரை கலிங்கா பாலு அல்லது ஒரிசா பாலு எனவும் ஒரிசா வாழ் தமிழ் மக்கள் இவரை தமிழ் பாலு எனவும் அழைத்தனர்,கடல்சார் ஆய்வுகள் மூலம் உலக நாடுகளுடனான தமிழ் தொடர்புகளை ஆராய்ந்தவர்.முகநூலில் தனது ஆராய்ச்சிக்கான குறிப்புகளை வெளியிட்டு வந்தவண்ணம் இருந்தார்.

பிறகு வாட்ஸ் ஆப்பில் தென்புலத்தார் என்ற குழுவினை அமைத்து தனது ஆய்வுகளை வழி நடத்தி வந்தார்.கடல்சார் ஆய்வுகளுக்கு பெயர் பெற்ற இவர் சோழ ஏரி என்றழைக்கபட்ட பசிபிக் பெருங்கடலில் தனது கடல்சார் குமரிக்கண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

கடல் ஆமைகளை பயன்படுத்தி தமிழர்கள் எப்படி வேறு நாடுகளுக்கு பயணித்தார்கள் என்பதனை தெளிவாக தனது ஆய்வுகள் மூலம் உலகத்திற்கு கூறினார்.கடல் ஆமைகள் நன்னீர் வழித்தடங்களில் பயணித்து வேறு நாடுகளை அடையுமெனவும்,.எனவே தமிழர்கள் ஆமைகளை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு செல்லும் வழிகளை கண்டறிவர் எனவும் ஆராய்ந்து கூறினார்.தமிழ் பெண்களைப்போல் ஆமைகளும் முட்டையிட வருடம் ஒருமுறை தங்கள் பிறந்த இடத்திற்கு வந்து முட்டையிட்டு செல்லுமெனவும் ஆராய்ந்து கூறினார்.

மேலும் பழந்தமிழர் நிலபரப்பான குமரிகண்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த வருடம் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இவருக்கு நாக்கில் புற்றுகட்டி  இருப்பது தெரியவந்தது.அப்புற்றுக் கட்டியை அகற்றிய நிலையில் இவரது குரல் சற்றே பாதித்திருந்தது.ஆனாலும் அடுத்த மாதமே களப்பணிக்கு திரும்பினார். இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு உடல்நலகுறைபாட்டால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று சிகிச்சை பலனின்றி இயற்கையை எய்தினார்.

தமிழ் மகனார் ஐயா ஒரிசா பாலு மறைவையொட்டி தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
CineDesk