திருமணத்திற்கு பெண் தேடி டீ கடையில் விளம்பரம்! வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள்!

0
153

திருமணத்திற்கு பெண் தேடி டீ கடையில் விளம்பரம்! வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள்!

தற்போது திருமணம் செய்வது என்றாலே பெரிய குதிரை கொம்பான விஷயமாக இருக்கிறது. அதுவும் முக்கியமாக ஆண்களுக்குதான் அதிகம். பெண்கள் வீட்டில் இவ்வளவுதான் கட்டளைகள் என்று இல்லை. பெண்ணின் வீட்டில் சொல்லும் அனைத்திற்கும் சரி என்றால் மட்டுமே திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். அதுவும் மிகவும் பாவம் 90 களின் பசங்க தான். அவர்களது நிலைமை முதலில் ஜாதகம் ஒத்துப்போக வேண்டும். அதன் பிறகு ஒருவருக்கொருவர் பிடிக்க வேண்டும். அதன் பின்பு நாம் பேசி பழகும் விஷயங்கள், இரு வீட்டினரின் அனுமதி, சீர், செனத்தி என அனைத்தையும் கணக்கிட்டு தான் ஒரு திருமணம் அமைகிறது.

தற்போது எந்த வரதட்சணையும் இன்றி திருமணம் கட்டிக்கொள்கிறேன் என்றாலும் பெண்கள் வீட்டில் நிறைய கட்டளைகளை சொல்ல்கிறார்கள். சிலர் வாழ்க்கையில் பெண்ணை திருமணத்திற்காக தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போதும் அவர்களுக்கு அமைய மாட்டேன் என்கின்றது. இப்போதுள்ள பெண்கள் எல்லாம் நிறைய ஸ்டேட்டஸ் பார்த்து தான் சரி என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலையில் தற்போது கேரளாவில் திருச்சூரில், டீக்கடையில் ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திருமணத்திற்கு பெண் தேவை என அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

அவர் திருமணத்திற்காக ஜாதி, மதம் பார்க்கவில்லை என குறிப்பிட்டு, அவரது கைப்பேசி எண்ணையும் தெரிவித்து இருந்தார். அவர் எந்த பதிவு நிலையங்களுக்கும் செல்லவில்லை,  தரகரையும் நாடாமல் அவரது டீக்கடையில் ஒரு பலகையை மாட்டியுள்ளார். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் , பெண் தேவை என்று மட்டும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதை அவரது நண்பர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதன்காரணமாக தற்போது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலிருந்து எல்லாம் அழைப்புகள் வருகிறதாம்.

இது பற்றி 33 வயதான உன்னிகிருஷ்ணன் நம்மிடம் கூறும்போது எனக்கு தலையில் கட்டி இருந்தது. தற்போது அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டேன். அதன் பின் வாழ்கையை துவங்கலாம் என ஒரு லாட்டரி கடை ஆரம்பித்தேன். பின் அதையே ஒரு டீக்கடை ஆக மாற்றி விட்டேன். தற்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். நான் ஒரு தினக்கூலி. எனவே எனக்கு திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரப்படுத்தினேன். இதை பதிவிட்ட எனது நண்பர்களின் காரணமாக எனக்கு பல்வேறு அழைப்புகள் வருகின்றன.

இந்த தகவலை பார்த்து சிலர் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றனர். திருமணம் சீக்கிரம் நடக்கும் என்றும், ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்ட தற்காக திட்டியும் கருத்துகளை பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஜாதி, மதம் தேவையில்லை என்பதன் காரணமாக பலர் என்னைப் பாராட்டி வருகின்றனர். தற்போது வரும் அந்த அழைப்புகளை எடுத்து பேச கூட நேரமில்லாத அளவுக்கு, அவ்வளவு அழைப்புகள் வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleதாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?
Next articleபிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?