தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?

0
116
Marriage gold scheme updated by tamilnadu government
Marriage gold scheme updated by tamilnadu government

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

தாலிக்குத் தங்கம் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களினால் தொடங்கப்பட்டது.அதற்கு முன்பான தி.மு.க ஆட்சியில் திருமண உதவித் திட்டம் இருந்து வந்தது.தாலிக்குத் தங்கம் திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை தமிழக அரசானது சுற்றறிக்கையாக தற்போது வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தாலிக்குத் தங்கம் திட்டமானது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டும்தான் எனவும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் வீட்டில் அரசு வேலையில் யாரும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாடிவீடு உள்ளவர்களும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.இதனிடையே தற்போது திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த திட்டம் செல்லுபடியாகாது.அதனால் திருமண மண்டபங்களில் திருமணம் செய்வோர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இதனால் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.மேலும் திருமண மண்டபத்தில் திருமணம் செய்தவர்களும் இதற்கு முன்பு பயனடைந்து வந்தனர்.இந்த தகவலால் பெற்றோர்கள் மற்றும் திருமணம் ஆகவிருக்கும் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K