கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார்!! தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம்!!

0
191
Kalashetra director Revathi Ramachandran suddenly fainted
#image_title

கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார்!! தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம்!!

மாநில மனித உரிமை ஆணைய ஐஜி தலைமையில் குழு விசாரணை செய்து ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

நாளை அடையாறு கலாக்ஷித்ரா மா கல்லூரியில் விசாரணை நடத்த அதிகாரிகள் செல்ல உள்ளதாக தகவல்.

அடையாறு கலாக்ஷித்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திய போது நேரடியாக சென்று விசாரணை நடத்தியது.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்ற அடிப்படையில் நூற்றுக்கணக்கான புகார்கள் வந்துள்ளதாகவும் மகளிர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கல்லூரி மாணவிகளின் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடையாறு கலாக்ஷேத்ரா முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் செய்திகள் வெளியானதை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளது.

குறிப்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் ஐஜி மகேந்திர குமார் ரத்தோட் தலைமையில் குழு அடையாறு கலாக்ஷேத்ரா கல்லூரிக்குச் சென்று விரிவான விசாரணை நடத்தி ஆறு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous article50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!
Next articleஅடுத்து என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?