உலகக் கோப்பையில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய அணி!…. மழையால் நடந்த விபரீதம்!
உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
டி 20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 12 லீக்கின் இறுதி சுற்றுக்கு நெருங்கி வருகிறது. அனைத்து அணிகளும் 3 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இதுவரை எந்தவொரு அணியும் அரையிறுதிக்கு தேர்வாகவில்லை. ஆனால் முதல் அணியாக ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இருந்தே வெளியேறியுள்ளது.
வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருந்த இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. மீதம் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோற்றது. 4 போட்டிகளில் ஒன்றைக் கூட வெல்லவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. இன்று விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் இது அதிகாரப்பூர்வமாகியுள்ளது. இது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இடம் பெற்ற குரூப் ஏ வில் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மற்றொரு குரூப்பான பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
ஆனாலும் அரையிறுதிக்கு செல்லும் அணிகளுக்கான போட்டியில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கும் இடையேயும் போட்டி உள்ளது. இதனால் இன்னும் சில நாட்களுக்குப் பிறகு முழுமையான விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.