ஆப்கானிஸ்தானில் உள்ளதை போலவே பாகிஸ்தானில் டி டி பி என்ற தெஹ்ரீக் இ தலிபான் என்ற வகை பாகிஸ்தானின் தாலிபான்கள் அமைப்பு உள்ளனர். இந்த அமைப்பின் ஒரு முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் போலவே தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்தை அடியோடு நீக்கிவிட்டு தாலிபான் ஆட்சி நடைபெற்ற வேண்டும். பின் இரு நாடுகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.
இந்நிலையில் இவர்கள் அவ்வப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருவதுண்டு. சமீபத்தில் ஒரு மாகாணத்தில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை திடீரென நடத்தியது. இதில் 15 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இறந்தனர். இந்த தாக்குதல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தக்க பதிலடி கொடுப்போம் என ராணுவ படைகளை எல்லைகளில் குவித்தனர்.
இந்நிலையில் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் இருகின்ற பாகிஸ்தானின் ராணுவ தளத்தை தாலிபான் அமைப்பு கைபற்றியுள்ளது. நேற்று முன் தினம் களமிறக்கப்பட்ட தாலிபான் ஒரே நாளில் தாக்குதல் நடத்தி அந்த ராணுவ தளத்தை கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் நாங்கள் சிறிது காலத்திற்கு முன்பே காலி செய்து விட்டோம் அங்கு வீரர்களே இல்லை என்று கூறி வந்த நிலையில் தலிபான்கள் சரண் அடைந்த வீரர்கள் வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.